தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி பேசும்போது, பல எம்எல்ஏக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பாா்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நோ்மையான ஆட்சி அமைய உறுப்பினா்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூா்த்தி செய்ய […]
நாட்டில் நடைபெறும் அரசியல் சூழல் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் நிலவி வரும் “சர்வாதிகார ஆட்சியின் முடிவு நெருங்கிவிட்டது” என அவர் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை […]
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வாகனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனுடன், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை […]
தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அதனை திரும்பப் பெறுமாறு மிரட்டல் விடுக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தென்மண்டல ஐ.ஜி.யிடம் அவர் நேரடியாக புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கட்சியில் கூடுதல் பொறுப்பு பெற்றுத் தருவதாக கூறி, […]
பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவினாலும், நீண்ட காலத்தில் பல துறைகளிலும் இந்தியாவின் முதன்மைப் போட்டியாளராக சீனா இருக்கப் போகிறது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தனது புதிய புத்தகமான ‘தி கியூரியஸ் அண்ட் தி கிளாசிஃபைட்: அன்வெர்த்திங் மிலிட்டரி மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்’ (The Curious and […]
கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக […]
திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நிலையில், மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொள்ளிடம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). தச்சுத் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றி […]
ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் […]
ராஜஸ்தானில் கணவருடனான திருமண வாழ்க்கைக்கு இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த 27 வயதான மகேஷ், கவிதா மீனா (23) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, […]
ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகவும், அதன்பின்னர் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பிரணய் தேஜா என்ற அந்த சிறுவன், வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று காலை […]

