சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387! 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் […]
சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. […]
ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை […]
நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தியானது ஆரம்ப மதிப்பீட்டை விட சுமார் 11 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரும்பை தாக்கும் நோய்கள் மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் காரணமாக, உற்பத்தி 343 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 306 லட்சம் மெட்ரிக் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.48.18-ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி […]
சிறு குழந்தைகள் என்றாலே முழுமையான உடல்நலத்துடன் இருப்பார்கள் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால், அரிதான சில சூழல்களில் குழந்தைகளுக்கும் திடீரென இதயத் துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நேற்று முதலாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘ஹார்ட் அட்டாக்’ காரணமாக இருக்கலாம் என […]
நாட்டின் சிறந்த பள்ளி ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழா கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பள்ளி ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 5 அன்று தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய […]
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லொசேன் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று, தனது நடப்பாண்டின் சிறந்த திறமையை வெளிப்படுத்தி 88.05 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதுகு காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அவர் கலந்துகொள்ளும் முக்கியமான தொடர்களில் இதுவும் ஒன்றாகும். இப்போட்டியில் இலங்கையின் ரூமேஷ் தரங்க பதிராஜ் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ராவுக்கு […]
சுற்றுச்சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் முடி வறட்சி, பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, தலைமுடியின் இயற்கையான பொலிவு குறைய வாய்ப்புள்ளது. இதற்காக பலரும் விலை உயர்ந்த கண்டிஷனர் மற்றும் ஹேர் மாஸ்க் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் கண்டிஷனர் தயாரித்துப் பயன்படுத்தலாம். அந்த வகையில், ஜாதி மல்லி […]
மியான்மரின் மத்திய சகைங் (Sagaing) பகுதியில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தின் மீது நேற்று(வெள்ளிக்கிழமை) ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரு வார கால தியான பயிற்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு மேற்கே சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள மியாங் டவுன்ஷிப்பின் ஸ்வெல் லே ஓ (Swel Le Oh) […]
ஒரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையான வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் குலதெய்வத்தின் பரிபூரண அருள் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. நாம் என்னதான் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும் பெரிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலும், நமது குலதெய்வத்தின் ஆசி கிடைக்காத வரை எந்தவொரு காரியமும் முழுமையாக வெற்றி பெறாது என்பது ஆன்மிக நம்பிக்கை. அத்தகைய ஆற்றல் வாய்ந்த குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும்போது நாம் பெற்று வர வேண்டிய ஒரு முக்கியமான பிரசாதமும், அதன் அளப்பரிய நற்பலன்களும் […]

