அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளம் அருகே நேற்று (வியாழக்கிழமை) சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறுகையில், இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ததாக தெரிவித்தார். அவர்களின் தற்போதைய நிலை […]
அமெரிக்கா – இரான் இடையேயான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவிவரும் பதற்றம் காரணமாக, அங்குப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய மாலுமிகள் மீண்டும் ஒருமுறை பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஈரான் தொடர்பான சமீபத்திய மோதல் நிகழ்வுகளில் ஒன்றாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்தியர்கள் உள்பட 22 பணியாளர்களுடன் […]
சோமாலியாவின் புன்ட்லான்ட் கடற்கரை அருகே துருக்கி நாட்டு ராணுவ ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதில் 6 இந்தியர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சிக்கியுள்ளனர். கமரூன் நாட்டு கொடியுடன் இயங்கும் ‘எம்/வி லுடுப்’ (M/V LUTUF) என்ற இந்த சரக்குக் கப்பல், சோமாலியாவின் புன்ட்லான்ட் பகுதியில் உள்ள எய்ல் மாவட்டத்தில் உள்ள மர்ரா என்ற இடத்திற்கு அருகில் திங்கள்கிழமை அன்று கடத்தப்பட்டு, நுகால் […]
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியுடன் முடிவுக்கு வந்துள்ளன. இதில் ஆயுஷ் ஷெட்டி மற்றும் பி.வி. சிந்து ஆகிய முன்னணி இந்திய வீராங்கனை மற்றும் வீரர் இருவரும் போராடி வெளியேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஷி யுக்கியை முந்தைய சுற்றில் வீழ்த்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தியாவின் ஆயுஷ் […]
அரசுப் பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாகவும், மாணவர்களை விட “அமைச்சர்களின் நாய்களுக்கே சிறந்த வசதிகள் கிடைக்கின்றன” என்றும், மகாராஷ்டிர பள்ளி கல்வி அமைச்சர் தாதா பூசே பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பாளர் அபிஜீத் டிப்கே வலியுறுத்தினார். கடந்த வாரம் ‘ஸ்கூல் திக் கரோ’ (அரசுப் பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய அபிஜீத் டிப்கே , லாத்தூர் மாவட்டத்தின் அவுசா தாலுகாவில் உள்ள உஜனி […]
உடல் பருமன் தற்போது பலருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. உடல் எடை அதிகரிப்பது தோற்றத்தை மட்டுமின்றி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை நாடுகின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக கடுமையான டயட் அல்லது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை தொடங்க வேண்டிய அவசியமில்லை. அன்றாட வாழ்க்கையில் […]
டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் மாநிலங்களுக்கு இடையேயான செல் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், விலை உயர்ந்த போலி மற்றும் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த மாபெரும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ. 9 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத், […]
சமையலில் பயன்படுத்தும் உப்பில் இருக்கும் அயோடின் உடலுக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக தைராய்டு சுரப்பி சீராக செயல்படுவதற்கு அயோடின் முக்கியப் பங்கு வகிக்கிறது. அயோடின் போதுமான அளவு கிடைக்காதபோது, உடலில் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் T3 மற்றும் T4 என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்களை உருவாக்குவதற்கு அயோடின் தேவைப்படுகிறது. உணவில் […]
தமிழ்நாட்டில் உழவர் நலன் சார்ந்த அரசு மானியங்கள், பயிர்க் காப்பீடு மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் உண்மையான விவசாயிகளை மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்யவும், தகுதியற்ற போலிப் பயனாளிகளைக் கண்டறிந்து களையெடுக்கவும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ திட்டத்தில் முறைகேடுகளைத் […]

