சக நடிகையுடன் ஹோட்டல் அறையில் சிக்கிய பிரபல நடிகர்… நேரில் பார்த்த மனைவி எடுத்த அதிரடி முடிவு!

b601a5da2e13414ea5e13b5c8865c13a1ab9fb27e3ec1a3e5278f85a0d82d1bd

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகர் ஈஸ்வர் சாயைச் சுற்றி தற்போது பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. திருமணமாகி மகன் இருக்கும் நிலையில், சக நடிகையுடன் அவர் தனியறையில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.


‘பசிங்கா பாலலு’ உள்ளிட்ட நாட்டுப்புற பாடல்கள் மூலம் தெலுங்கு மாநிலங்களில் பிரபலமானவர் ஈஸ்வர் சாய். ஆல்பம் பாடல்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள இவர், ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்த நிலையில், சக நடிகையுடன் ஈஸ்வர் சாய் ஒரு அறையில் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவரையும் ஒரே அறையில் பார்த்ததாகவும், இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஈஸ்வர் சாயின் மனைவி, தனது கணவர் மீது இதுவரை முழுமையான நம்பிக்கை வைத்திருந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், அந்த நடிகை தங்களது குடும்ப வாழ்க்கைக்குள் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆனதாக தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அந்த நடிகை காதல் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்தபோது தானும் தனது கணவரும் அவருக்கு ஆதரவாக இருந்ததாக கூறியுள்ளார். ஆனால், பின்னர் அதே நபர் தங்களது திருமண வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நடிகை, ஈஸ்வர் சாயுடன் ஏற்கனவே அவரது பல்வேறு ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியவர் என்றும், தெலுங்கு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து நடித்த புதிய ஆல்பம் வெளியாகியுள்ள சூழலில், அதற்கு முன்பாக இருவரும் ஒரே அறையில் இருந்ததாக வெளியான தகவல் தற்போது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

Also Read: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! அடிக்கடி இந்தப் பழத்தை சாப்பிடுங்க.. கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

Saranya

Next Post

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; கவலையில் ரசிகர்கள்!

Thu Aug 20 , 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி அவர்களுக்கு கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னையில் உள்ள தனியார் […]
WhatsApp Image 2026 08 20 at 11.55.17 AM

You May Like