நமது வாழ்க்கையில் பொதுவாக எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. ஆனால், பலருக்கும் கடந்த காலத்திற்கு தற்போது சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அந்தவகையில், பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் தான் பாபா வாங்கா என்ற தீர்க்கதரிசி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார். பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக […]

2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகளுக்கான பயணத்திற்காக இந்தியா ரூ.67 கோடிக்கும் அதிகமாகவும், 2021 மற்றும் 2024 க்கு இடையில் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.295 கோடிக்கும் அதிகமாகவும் செலவிட்டதாக வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ’பிரையன் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த புள்ளிவிவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை மற்றும் […]

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. […]

நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் […]

2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஃபிடே (FIDE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போட்டிக்கான நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2025 உலகக் கோப்பையில் 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா கடைசியாக இந்த நிகழ்வை 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தியது. அப்போது, சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டும், போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற […]

பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 65 முறை விமான எஞ்சின் செயலிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 11 MAYDAY அவசர அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகதிடம் (DGCA) இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் 2020 முதல் 2025 வரை, 65 விமான எஞ்சின்கள் செயலிழந்த சம்பவங்களும், 11 ‘மேடே’ அழைப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த 65 […]

இந்தியாவில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களாக கோயில்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. அவை கட்டடக்கலை மற்றும் பக்தி ஆகியவற்றின் சான்றுகளாக திகழ்கின்றன.. சில தனித்துவமான அதிசயக் கோயில்களும் நாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் தனித்துவமான கோயில் பற்றி தெரியுமா? உனகோடி தான் அது.. உனகோடி திரிபுராவில் உள்ள ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாகும். பண்டைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் […]