fbpx

தேசிய செய்திகள்

  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. இந்தியா போர் நிறுத்தத்தை அறிவிக்கப் போகிறதா..? விரைவில் முக்கிய முடிவு..

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வரும் நாட்களில் போர் நிறுத்தத்தை இந்தியா நிறுத்தப்போவவதாக அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், மத்திய அரசு இந்த முடிவை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பலமுறை உறுதிமொழிகள் அளித்திருந்தாலு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்தத் தவறியதால் இந்தியா இந்த கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கை பாகிஸ்தானை லும் தனிமைப்படுத்தக்கூடும் என்றும், அந்நாட்டின் போலித்தனத்திற்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    பிப்ரவரி 2021 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) போன்ற பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து ஊடுருவி வருகின்றன. பாகிஸ்தானும் துப்பாக்கி சுடும் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் மூலம் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது. குறிப்பாக இந்த சம்பவங்கள் 2023 மற்றும் 2024 க்கு இடையில் அதிகரித்துள்ளன.

    எனவே போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முழுமையாக தயாராக உள்ளது என்றும், ஏதேனும் விளைவுகள் இருந்தால் அவற்றைக் கையாளும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா தனது எல்லைகளையும் பொதுமக்களையும் பாதுகாக்க முழு உரிமையும் கொண்டுள்ளது, மேலும் அது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

    பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) தீவிரவாதிகளுக்கு தளவாட ஆதரவு, பயிற்சி மற்றும் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    பயங்கரவாத நிதியுதவியை ஒடுக்க நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) மற்றும் சர்வதேச கூட்டாளிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் மீறியுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. LeT/TRF போன்ற குழுக்கள் புதிய பெயர்களில் வெளிப்படையாக செயல்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

    2021 போர் நிறுத்தம் ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

    இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இடைப்பட்ட இரவில் 2021 போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

    மேலும் அமைதியைக் குலைத்து வன்முறைக்கு வழிவகுக்கும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கவலைகளைத் தீர்க்க ஒப்புக்கொண்டனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் பிற அனைத்துத் துறைகளிலும் உள்ள நிலைமையை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

    எனவே, எல்லைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நிலையான அமைதியை அடைவதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தவொரு எதிர்பாராத சூழ்நிலை அல்லது தவறான புரிதலையும் தீர்க்க ஹாட்லைன் தொடர்பு மற்றும் எல்லைக் கொடி கூட்டங்களின் தற்போதைய வழிமுறைகள்” பயன்படுத்தப்படும் என்று இரு தரப்பினரும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read More : இந்தியர்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்.. பதற்றம் அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசு உத்தரவு..

சினிமா 360°

உலகம்

  • “ஒவ்வொரு துளியும் எங்களுடையது.. இது நீர் போர்..” சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதற்கு பாக்., பதில்..

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, வாகா எல்லையை மூடுவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை பாகிஸ்தான் சட்டவிரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. மேலும் இதனால் நீருக்கான போர் தொடங்கும் என்றும், இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக உறுதியளித்த பாகிஸ்தான், உலக வங்கி போன்ற உலகளாவிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா ஒருதலைப்பட்சமாக வெளியேற முடியாது என்றும் தெரிவித்துள்ளது..

    பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவீஸ் லெகாரி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைத்தது ஒரு நீர் போர் செயல்; ஒரு கோழைத்தனமான, சட்டவிரோத நடவடிக்கை. ஒவ்வொரு துளியும் எங்களுடையது., அதை நாங்கள் முழு பலத்துடன் – சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உலகளவில் பாதுகாப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காக ஒரு ஆய்வுக் கூட்டத்தை அந்நாட்டு அரசு நடத்திய நிலையில் அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்..

    நாட்டை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்

    ஜம்மு காஷ்மீரில் பிரபல சுற்றுலா சுற்றுலா தளமான பஹல்காமில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கீழ் இயங்கும் TRF என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    பாகிஸ்தான் மற்றும் உள்ளூர் காஷ்மீர் பயங்கரவாதிகள் இருவரும் தாக்குதலில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.

    இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் இருந்து தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற்றவும், வாகா-அட்டாரி நில எல்லையை மூடவும், சார்க் விசா விலக்கு திட்ட விசாக்களை (SVES) ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் இந்த சம்பவத்திற்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்நாடு தெரிவித்து தெரிவித்து வருகிறது.

    1960 ஆம் ஆண்டு உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி அமைப்பிலிருந்து 80% நீர் ஓட்டம் இந்தியாவால், பாகிஸ்தானுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவு பாகிஸ்தானின் விவசாயத் துறையை பாதிக்கும்.

    பாகிஸ்தானின் எதிர்வினை என்ன?

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளார். மேலும்”பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை சமர்ப்பிக்க வேண்டும். நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முடிவுகளுக்கு பாகிஸ்தான் “வார்த்தைக்கு வார்த்தை” பதிலளிக்கும் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர் “இது ஒரு அரசியல் தந்திரம் தவிர வேறில்லை. இந்தியா தனது அரசின் உளவுத்துறை தோல்விகளுக்கு பாகிஸ்தானைக் குறை கூற முயற்சிக்கிறது,” என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவின் எந்தவொரு அழுத்தம் அல்லது தந்திரத்திற்கும் பாகிஸ்தான் அடிபணியாது என்றும், “வலுவான மற்றும் பயனுள்ள” பதிலடி குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்தார். மேலும் ” அவர்கள் (இந்திய அரசு) நீண்ட காலமாக சிந்து நதி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முயற்சித்து வருகிறது. உலக வங்கியும் இதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா தனியாக இந்த முடிவை எடுக்க முடியாது.” என்று கூறினார்.

    Read More : இந்தியா உடன் மோதினால்.. பாகிஸ்தான் ராணுவமே அழிந்துவிடும்.. 1993-ம் ஆண்டே கணித்த CIA.. வெளியான பரபரப்பு ஆவணம்..

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

இந்திய குடிமக்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ளவர்கள் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 26 […]

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் பழிவாங்கப்படுவார்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சபதம் செய்துள்ளார். காஷ்மீரில் நடந்த படுகொலைக்குப் பிறகு முதல் முறையாகப் பேசிய அவர், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை பெறுவார்கள் என்றும், ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு, இந்தியா தண்டிக்கும் என்றும் பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்தார். எனினும் கடந்த […]