பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது பிரேசில் நாட்டில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக கலவரம் மற்றும் தீய செயல்கள் தொடர்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன இந்த செய்தி தனக்கு ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் இருக்கிறது என்று பிறந்த நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ஜனநாயக மரபுகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். பிரேசில் நாட்டு அதிகாரிகளுக்கு இந்தியா தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.