fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • பாகிஸ்தான் பொதுமக்கள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தியது.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..

    ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் முழுவதும் ஸ்ரீநகர் முதல் ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் வரையிலான 36 நகரங்களில் உள்ள இந்திய இராணுவ நிலைகள் மீது நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் 300 முதல் 400 துருக்கிய ட்ரோன்களை ஏவியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் நேற்று தனது வான்வெளியை மூடவில்லை எனவும் பொதுமக்கள் விமானங்களை இயக்க அனுமதித்தது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளியில் பறக்கும் சந்தேகத்திற்கு இடமில்லாத பொதுமக்கள் விமானங்களை கேடயங்களாகப் பயன்படுத்தியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது..

    இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்னல் சோபியா குரேஷி, பாகிஸ்தானின் தாக்குதல்களை விமானப்படை எவ்வாறு சுட்டு வீழ்த்தியது மற்றும் செயலிழக்கச் செய்தது என்பது குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர் 50 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கூறினார்.

    மேலும் “ 20 ட்ரோன்கள் ரேடியோ அதிர்வெண்களை முடக்குவதன் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன. பெரும்பாலான ட்ரோன்கள் நிராயுதபாணியாக இருந்தன, இது பாகிஸ்தான் இந்தியாவின் பாதுகாப்புகளை சோதித்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், பல கேமராக்கள் பாகிஸ்தானில் உள்ள தரை நிலையங்களுக்கு காட்சிகளை அனுப்பியிருக்கக்கூடும்.

    நூற்றுக்கணக்கான ட்ரோன்ககள் அனைத்தும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டன. பாகிஸ்தானின் இந்த செயல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் . ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு அல்லது எல்ஓசி வழியாக தொடர்ந்து சிறிய ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இதில் ஒரு சிப்பாய் உட்பட 16 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

    பதிலுக்கு, இந்திய இராணுவம் அதன் எதிரணிக்கு ‘பெரும் சேதத்தை’ ஏற்படுத்தியது, நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியது, மேலும் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு வலையமைப்புகளை முடக்குவதன் மூலம் பதிலடி கொடுத்தது.

    சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் குப்பைகள் பகுப்பாய்வு செய்யப்படும். அதன், முடிவுகள் பாகிஸ்தான் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்களில் சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. iந்த தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தொடங்கியது.

    பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலின் முதல் அலை மே 7 இரவு தொடங்கியது. இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளைத் தாக்கி பாகிஸ்தான் பதிலளித்தது, ஆனால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி, இந்தியா இந்த தாக்குதலை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் முழுவதும் ஸ்ரீநகர் முதல் ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் வரையிலான 36 நகரங்களில் உள்ள இந்திய இராணுவ நிலைகள் மீது நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் 300 முதல் 400 துருக்கிய ட்ரோன்களை ஏவியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நேற்று தனது வான்வெளியை மூடவில்லை எனவும் பொதுமக்கள் விமானங்களை இயக்க அனுமதித்தது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளியில் பறக்கும் சந்தேகத்திற்கு […]