கோவை காந்திபுரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், “நாடாளுமன்ற தொகுதி வரையறை தமிழ்நாட்டை பாதிக்காது என அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். இப்போது எதற்காக கருப்புக் கொடி போராட்டம்?
தோல்வி பயத்தால் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக திமுக அரசு கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறது. ஸ்டாலின் நினைப்பதற்கு மேலாக, அவருடைய கட்சி கூட்டணித் தலைவர் நினைப்பதற்கு மேலாக, அற்புதமாக இந்தப் தொகுதி வரையறையை மத்திய அரசு செயல்படுத்துவாங்க. அப்ப இந்த ஸ்டாலின் என்ன சொல்லுவார் தெரியுமா? நான் கருப்புக் கொடி கட்டிய காரணத்தினால் தான் மத்திய அரசு பயந்து போய் செயல்படுத்திட்டாங்கனு சொல்லுவார். பாருங்க நாளைக்கு பத்திரிக்கையில் அப்படித்தான் வரும் என்றார்.
மேலும், தமிழ்நாடு பயனடையும் வகையில் தொகுதி மறு சீரமைப்பு இருக்கும் எனவும் இபிஎஸ் உறுதி அளித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு அதிகாரிகள், போலீசாரை யாராலும் காப்பாற்ற முடியாது. தவறு செய்த அதிகாரிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன் என்றார்.
மேலும், தமிழ்நாடு தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியை இழுப்பது ஏன்? அதிமுகவை குறை சொல்ல முடியாததால் திமுகவினர் சம்பந்தமின்றி பேசி வருகிறார்கள். கரூரில் இருந்து கோவைக்கு ஒரு கொடிய நோய் வந்துள்ளதாக செந்தில்பாலாஜியை மறைமுகமாக சாடிய இபிஎஸ், கொரோனாவுக்கு கூட மருந்து உண்டு, இந்த நோய்க்கு மருந்தே இல்லை என கூறினார்.
Read more: நீங்கள் உறங்கும்போது உங்கள் படுக்கையறை கதவுகளை மூடியே வைத்திருக்கிறீர்களா? நிபுணர்கள் ஷாக் தகவல்..!



