Viral Video| “விஜய் அண்ணாவ பார்த்துட்டேன்” மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த திருமண ஜோடி! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்..

campaign

தவெக தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், சென்னை வில்லிவாக்கம், அண்னாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக பனையூர் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், பாதி வழியிலேயே தனது பிரசார வேனுக்கு மாறி தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.


வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பூக்களை தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். திருவள்ளூருக்கு செல்லும் வழியில் புதிதாக திருமணமான ஜோடி ஒன்று விஜய்யை பார்க்க சாலையோரத்தில் காத்திருந்தனர். இதனை கவனித்த விஜய், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த தம்பதியை தனது பிரசார வேனுக்குள் அழைத்து, அவர்களுக்கு அன்போடு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற திருமண தம்பதிகள் விஜயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணப்பெண் விஜய் முன்பு விசில் அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பார்த்த அங்கிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Subscribe to my YouTube Channel

Read more: WWE ரெஸ்ல்மேனியா 42: ஜாம்பவான் லெஸ்னரை வீழ்த்திய ஓபா ஃபெமி..! ஓய்வு அறிவிப்பு?

English Summary

“I saw Vijay Anna” The married couple jumped with joy! Interesting thing that happened during the campaign..

Next Post

Walking: தினமும் 30 நிமிடங்கள் மட்டும் நடந்தால் போதும்.. உங்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா..?

Mon Apr 20 , 2026
Just walking for 30 minutes every day is enough.. Do you know how good it is..?
Walking 2025

You May Like