அமைச்சராக பதவி ஏற்ற ராஜ்மோகன்.. மேடையில் செய்த செயல்.. அந்த நொடி அதிர்ந்த அரங்கம்..!

rajmohan

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜயின் முதலமைச்சர் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கூட்டணி ஆதரவுடன் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.


பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வெள்ளை சட்டை மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்து கெத்தான தோற்றத்தில் மேடையேறிய விஜயை காண ரசிகர்கள் உற்சாக கோஷங்களை எழுப்பினர். தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர், விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், “ச. ஜோசப் விஜய் என்னும் நான்…” என்று தொடங்கி விஜய் உறுதிமொழி ஏற்றார். அந்த தருணத்தில் அரங்கம் முழுவதும் இருந்த தவெக தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பலர் செல்போன்களில் அந்த காட்சியை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

விஜய் பதவியேற்றதையடுத்து அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலாவதாக என். ஆனந்த் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா, கே.ஜி. அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒவ்வொருவராக மேடையேறி உறுதிமொழி ஏற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அப்போது “ராஜ் மோகன் என்னும் நான்..” எனக் கூறி அமைச்சராக ராஜ் மோகன் பதவி ஏற்றுக் கொண்டார். நடைமுறையின்படி உறுதி மொழி ஏற்றுக் கொண்டா ராஜ் மோகன் “என் ஆண்டவன் மீது ஆணை” என்ற வரிகளின் போது விஜயை நோக்கி உறுதி பூண்டார். இதனை பார்த்த தொண்டர்கள் கத்தி ஆரவாரம் பூண்டனர். அரங்கம் முழுவதும் விசில் சத்ததால் எதிரொலித்தது.

Subscribe to my YouTube Channel

Read more: BREAKING| “ச. ஜோசப் விஜய் என்னும் நான்..” முதலமைச்சரானார் விஜய்..! 9 அமைச்சர்களும் பதவி ஏற்பு..!

Next Post

BREAKING| 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை..! 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட விஜய்..

Sun May 10 , 2026
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழா மேடையிலேயே மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முன்னிலையில் பதவியேற்ற விஜய், பின்னர் மேடையிலேயே முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கைழுத்தாக தமிழக மக்களுக்கு மாதம் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் […]
CM 1 1

You May Like