fbpx

3 ஜிபி டேட்டா.. 50 நாட்கள் வேலிடிட்டி.. BSNL-ன் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்..

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் விலையை விட குறைவான விலையில் பல திட்டங்கள் வழங்கப்படுகின்றன.. அந்த வகையில் பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.107 ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கலாம்.. இந்த திட்டம் 50 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர, பிஎஸ்என்எல் ட்யூன்களும் 50 நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

50 நாட்கள் வேலிடிட்டி தவிர, இந்த திட்டத்தில் அழைப்பு மற்றும் டேட்டா பலன்களும் கிடைக்கும். இந்த திட்டம் இணையத்திற்கு 3 ஜிபி டேட்டாவையும், அழைப்புகளுக்கு 200 நிமிடங்களையும் வழங்குகிறது. ஆனால் இத்திட்டத்தில் எந்த எஸ்எம்எஸ் நன்மையும் இருக்காது.

இதனிடையே இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவைகளை தொடங்க தயாராகி வரும் நிலையில், அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இவற்றின் கீழ், BSNL க்கு பெரும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தொலைதூர பகுதிகளில் அதன் 4G சேவைகளை தொடங்குவதற்கு நாட்டில் புதிய மொபைல் டவர்களை நிறுவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் மிரட்டல்... போலீசார் விசாரணை..

Mon Aug 15 , 2022
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று மூன்று மிரட்டல் அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது… ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஹர்ஸ்கிசந்தாஸ் மருத்துவமனையின் எண்ணுக்கு அந்த அழைப்புகள் வந்தன. இதுகுறித்து மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை புகார் அளித்துள்ளது. மருத்துவமனைக்கு 3க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. விசாரணை நடைபெற்று வருகிறது.” […]

You May Like