fbpx

ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. இனி கவலை வேண்டாம்.. 24×7 கட்டணமில்லா எண் அறிமுகம்..

ஆதார், பதிவு நிலை மற்றும் பிற விவரங்கள் தொடர்பான அப்டேட்களை சரிபார்க்க UIDAI புதிய கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்த அடையாள எண்ணை வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டு UIDAI ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற தகவல்கள் உள்ளன.

இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. UIDAI-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. அந்த பதவில் “ IVR தொழில்நுட்பத்தில் புதிய சேவைகள் 24×7 கிடைக்கும்.. ஆதார் அப்டேட் குறித்த தகவல்களை SMS மூலம் பெறலாம். ஆதார் அட்டை பதிவு நிலை தொடர்பான அப்டேட்களை பெற வாடிக்கையாளர்கள் 1947க்கு டயல் செய்யலாம், அல்லது எஸ்எம்எஸ் அனுப்பலாம். 24 மணி நேரமும் இந்த சேவை கிடைக்கும்.. ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு நிலை, PVC அட்டையின் நிலை அல்லது SMS மூலம் தகவல்களைப் பெறலாம், ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சமீபத்தில், அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட், ‘ஆதார் மித்ரா’வை அறிமுகப்படுத்தியது. இதில் ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம், அதன் நிலையையும் கண்காணிக்கலாம்.. மேலும் ஆதார் பதிவு/புதுப்பிப்பு நிலை, ஆதார் பிவிசி கார்டு நிலையைக் கண்காணித்தல், பதிவு மையத்தின் இருப்பிடம் பற்றிய தகவல்களை ஆதார் மித்ரா மூலம் நீங்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

சீரியல் கல்யாணத்தில் தாலி கட்டுவது யார் தெரியுமா….?

Wed Feb 15 , 2023
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே எழில் திருமண காட்சிகள் தான் ஓடிக்கொண்டிருந்தது.இந்த காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருந்தது .இந்த நெடுந்தொடரில் வில்லியான வர்ஷினியுடன் திருமணம் நடைபெறவிருந்ததை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் காதலித்து வந்த அமிர்தா என்ற பெண்ணுடன் திருமணத்தை நடத்தி வைத்தார் பாக்கியலட்சுமி. அப்பாடா ஒரு வழியாக திருமணம் முடிந்தது என்று பெருமூச்சு விடுவதற்குள் பாக்கியலட்சுமியை தவிர்த்து குடும்பத்தில் […]

You May Like