fbpx

தனது சாதனைகளால் உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவுநாள் இன்று!

ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

தென்கோடி தமிழகத்தில் பிறந்த கடைக்குட்டியே!… ஏவுகணை நாயகனே!… அக்னி சிறகில் உயர பறந்தவரே, கனவுகாண சொன்ன இளைஞர் நாயகனே, நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அதனை செய்து காட்டிய சகாப்தமே. அறிவாற்றல், அறிவியலாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சொல்லாற்றல் இவற்றின் முழு உருவமும் நீங்கள் தான். எட்டமுடியாத சாதனைகள் புரிந்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவரே, பறக்கலாம், ஜெயிக்கலாம், சாதிக்கலாம் என்ற சக்தியை கொடுத்த எங்கள் அன்பு கலாமே! காலம் உங்களுக்கு என்றென்றும் சலாம் போடும். என்றென்றும் நினைவுகளில் இருக்கும் இந்த ஏவுகணை நாயகனின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக 1931-ஆம் ஆண்டு பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம். சிறு வயதிலேயே வறுமையை எதிர்கொண்ட அவர், பள்ளி கல்விக்கு இடையில் சைக்கிளில் சென்று செய்தித்தாள்கள் விநியோகம் செய்து வந்தார். எனினும் படிப்பு மீதான கவனம் மட்டும் சிதறவில்லை. சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளி பொறியியல் படிப்பு முடித்த அவர் நாட்டிற்கான அறிவியலை நோக்கி தனது அறிவை செலுத்தினார்.

விண்வெளி, தேச பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒருசேர உழைத்த விஞ்ஞானி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பதவி வகித்தார். அப்போது பல ஏவுகணைகளை பறக்கவிட்டு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார். இதனால் ஏவுகனை நாயகன் என அழைக்கப்பட்டார்.

அப்துல்கலாம், இளைஞர்களிடம் ஏற்படுத்திய உற்சாகமும் தாக்கமும் மற்ற தலைவர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது. கனவு காணுங்கள் எனக்கூறி ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தார். விஞ்ஞானியாக இருந்து 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பின்பும் மாணவர்களிடம் உரையாற்றுவதை பெரிதும் விரும்பினார். அப்துல் கலாமின் மாணவர்கள் மீதான அன்பைக் கொண்டாடும் வகையில் உலக மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கற்பித்தல் அவரது இதயத்திற்கு நெருக்கமான பணியாக இருந்தது. அவர் அதை மிகவும் விரும்பினார். அவர் ஒரு ஆசிரியராக நினைவுகூரப்பட விரும்பினார். ஐஐஎம் ஷில்லாங் மாணவர்களிடையில் சொற்பொழிவு ஆற்றும் போதுதான் டாக்டர் கலாம் இறுதி மூச்சு விட்டார். அவர் தனது வாழ்வின் 40 ஆண்டுகளை ஒரு விஞ்ஞானியாகவும், அறிவியல் நிர்வாகியாகவும் முக்கியமாக டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மற்றும் இஸ்ரோ (ISRO) (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவற்றுக்காக அர்ப்பணித்தார். அந்த ஆண்டுகளில், டாக்டர் கலாம் இந்தியாவின் சிவில் விண்வெளித் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டார்.

கலாமின் இறுதி நாளும் அவர் விரும்பிய மாணவர்கள் முன்பு முடிவுபெற்றது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து காலமானார். பின்னர் சொந்த ஊரான பேக்கரும்பில் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. டாக்டர் கலாம் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகும், நாட்டின் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அவரது பங்களிப்புகள் இன்னும் நினைவுகூரப்படுகின்றன.

Kokila

Next Post

அடித்தது ஜாக்பாட்..!! விவசாய நிலத்தில் வைரம்..!! ரூ.12 லட்சத்திற்கு விற்ற பெண் விவசாயி..!! எங்கு தெரியுமா..?

Thu Jul 27 , 2023
பெண் ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்தது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழைக்காலத்தின் போது விவசாய நிலையங்களில் வைரம் கிடைப்பது வழக்கம். இதனால் மழை பெய்ய துவங்கியவுடன் கிராம மக்கள் விளைநிலங்களில் வைர வேட்டையில் ஈடுபடுவர். வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் மழைக்காலத்தில் கர்னூல் மாவட்டத்திற்கு வந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் வைரத்தை ரகசியமாக வாங்கி […]

You May Like