fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! சுங்கக் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் அது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இனி ஜிபிஎஸ் (GPS) மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதன்மூலம் நேரம் மிச்சமாகும் என்றும், வாகனங்கள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த முறைக்கான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்னும் 6 மாதங்களில் இது அமலுக்கு வரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Chella

Next Post

பண கஷ்டத்தை தீர்க்கும் மிளகு..!! இவ்வளவு விஷயம் இருக்கா..? ஞாயிற்றுக்கிழமை இதை செய்து பாருங்க..!!

Sun Mar 26 , 2023
மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய தன்மை இருக்கிறது. அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பகைவர்களுடன் பழகும் போதும், எதிரி நாட்டிற்கு செல்லும் போதும் தங்களுடன் இந்த மிளகினை எடுத்துச் செல்வார்களாம். அங்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் ஏதேனும் விஷம் கலந்து விட்டதாக உணர்ந்தால், அந்த மிளகை எடுத்து சாப்பிட்டு விட்டால் உடம்பில் இருக்கும் விஷம் முறியடிக்கப்படுமாம். இப்படி விஷத்தை முறிக்கக் கூடிய இந்த மிளகிற்கு […]

You May Like