மனிதனின் உடல் ஆரோக்கியமாக செயல் பட, விட்டமின் டி மிகவும் முக்கியம். வைட்டமின் டி சத்து நமது உடலில் குறையும் போது, எலும்புகள் பெலவீனம் அடைந்து விடும். இதனால் உடலின் பல்வேறு இடங்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைட்டமின் டி பெரும்பாலும் நமக்கு சூரிய ஒளியில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், குளிர் காலங்களில் நமக்கு சூரிய ஒளி சற்று குறைவாக இருப்பதால், நமது உடலுக்கு தேவையான விட்டமின் டி கிடைப்பதில்லை.
இதனால் உடல் வலி ஏற்படும். இந்த சூழ்நிலையை தவிர்க்க, நாம் அதிக மருத்துவ குணம் கொண்ட கீரை ஒன்றை சாப்பிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பால மருத்துவ குணங்கள் கொண்ட அந்த கீரையை சாப்பிடுவதால், நமக்கு தேவையான கால்சியத்தை பெறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் விட்டமின் டி கிடைக்க எந்த கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர் அமுதா, தனது யூடியூப் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும் போது, நாள் ஒன்றுக்கு 1000 யூனிட்ஸ் கால்சியமும், விட்டமின் டி3-யும் நமது உடலுக்கு தேவைப்படும். கால்சியத்தை பொறுத்த வரை நாம் பால் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒரு சில உணவுகள், சூரிய ஒளியில் இருந்து எடுத்துக் நாம் கால்சியம் சத்தை பெறுகிறோம். ஆனால், மழை மற்றும் குளிர் காலங்களில், நமக்கு போதுமான அளவு சூரிய வெளிச்சம் இல்லாததால் உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்.
இதுபோன்ற காலங்களில் நமது உடல் பெலவீனம் அடையாமல் இருக்க, நாம் பாலக்கீரை எடுத்துக் கொள்ளலாம். ஆம், இந்தக் கீரையில் மட்டும் கால்சியம் சத்து மட்டும் இல்லாமல், விட்டமின் டி3-யும் அதிகளவில் உள்ளது. இதனால் இந்தக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தாலே, நமது உடலுக்கு தேவையான விட்டமின் டி நமக்கு கிடைத்து விடும். இந்தக் கீரையை நாம் பொரியலாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த கீரையை, நாம் சூப் வைத்து குடிக்கலாம். மாவுடன் சேர்த்து அரைத்து தோசையாக சாப்பிடலாம், பருப்புடன் சேர்த்து கூட்டு போன்றும் சாப்பிடலாம். இந்த கீரையை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் நாம் கால்சியம் மாத்திரை, விட்டமின் டி3 மாத்திரை என்று மாத்திரைகளை தேடி ஓட வேண்டிய அவசியமே இருக்காது. கால்சியம் மற்றும் விட்டமின் டி3 கிடைக்க இந்த பாலக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறை நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதனால் எலும்புகள் வலுப்பெறும்.