உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரக்ய ராஜில் பாஜக பொதுச்செயலாளரின் மகன் வந்த வாகனத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பாஜக பொதுச் செயலாளர் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது . உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஆன விஜயலட்சுமி என்பவரது மகன் வந்த காரின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
கவுசாம்பியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே பல வருடங்களாக முன்பாக பிரச்சனை இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன என காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோஷ்டி மோதல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது . தற்போது அங்கே துப்பாக்கிகலாச்சாரமும் வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளதை இதுபோன்ற தாக்குதல்கள் காட்டுகின்றன.