முஸ்லீம்கள் தங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்தவில்லை எனில், இந்துக்கள் அதை செய்வார்கள் என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்..
கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “இந்துஸ்தானில் முஸ்லிம்கள் வசிப்பதால், இந்து பண்டிகைகளுக்கு ஒத்துழைப்பது அவர்களின் கடமை.. விநாயகர் சதுர்த்தி வரப் போகிறது.. நான் யாரிடமும் (அமைதியைப் பேணுமாறு) வேண்டுகோள் விடுக்கவில்லை. நீங்கள் (முஸ்லீம்கள்) ஹிந்துஸ்தானில் இருக்கிறீர்கள், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் பண்டிகைக்கு இடையில் வந்தால், நீங்கள் அனைவரும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும், நான் எச்சரிக்கிறேன்.
நான் ஏன் அவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும்? இந்துக்களுக்கு ஒத்துழைப்பது அவர்களின் கடமை.. முஸ்லீம்களுக்கு தங்கள் பண்டிகைகளை வீட்டில் கொண்டாட உரிமை உண்டு.. அவர்கள் ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.. எனவே முஸ்லீம்கள் தங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும்.. இல்லையெனில் சிக்கலை சந்திக்க நேரிடும்..” என்று கூறினார்.
இதற்கிடையில், ஈஸ்வரப்பாவின் கருத்துகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஈஸ்வரப்பாவுக்கு “மூளை இல்லை” என்றும், கடந்த காலங்களில் இதுபோன்ற பல பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது புதிதல்ல. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.. கடந்த ஏப்ரம் மாதம் அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால், ஈஸ்வரப்பா அமைச்சரவையில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. பெலகாவி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான கட்டணத்தை விடுவிக்க 40% கமிஷனுக்காக அமைச்சர் தன்னை துன்புறுத்தியதாக அந்த ஒப்பந்ததாரர் குற்றம் சாட்டியதால் சர்ச்சை வெடித்தது.. இதையடுத்து ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது..