fbpx

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ்..!! இனி காலை சாப்பாட்டிற்கு பதில் இதை குடிங்க..!! உடல் ஆரோக்கியமா இருக்கும்..!!

கோடை சீசனில் தினமும் காலையில் சாப்பாட்டிற்கு பதிலாக கம்பங்கூழ் குடித்தால் உடல் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சீசன் நேரத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, அதிகபட்ச சுவை, ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தைப் பெறச் சிறந்த வழியாகும். தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், புத்துணர்ச்சியூட்டும் உணவு வகைகளை தவறவிடாதீர்கள். அந்த வகையில், காலை உணவுகளை எடுத்துக்கொள்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

சிலர் காலை நேரங்களில் சாப்பிடாமலேயே இருப்பதால் அவர்களுக்கு நாள்முழுவதும் சோர்வாகவே காணப்படுவர். இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு ஆரோக்கிமான பழங்கள் மற்றும் பானங்களை அருந்துவோம். தினமும் காலை நேரத்தில் சாப்பாட்டிற்கு பதிலாக கம்பங்கூழ் குடித்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கவும் கம்பங்கஞ்சி உதவுகிறது. சிறுநீரைப் பெருக்கவும், நரம்புகளுக்கு புத்துணர்வையும் கொடுக்கும்.

Read More : ‘பெண்கள் சுயஇன்பம் செய்வதை களங்கப்படுத்த முடியாது’..!! ’மனைவி ஆபாசப் படம் பார்ப்பது குற்றமல்ல’..!! ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

English Summary

Drinking kampangoozh instead of food every morning during the summer season will keep your body fresh and healthy.

Chella

Next Post

இது தான் நேரம்... தமிழகம் முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுக்கு அண்ணாமலை முக்கிய அறிவுரை...!

Fri Mar 21 , 2025
Annamalai important announcement for BJP workers across Tamil Nadu

You May Like