ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை என பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு பக்கம் நாம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள் தொடர்பாக பேசி வருகிறோம், மறுபக்கம் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் இந்திய கலாச்சார பரப்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார்.
பொழுதுபோக்குக்கு நவீனம் மற்றும் கவரும் வகையிலான உள்ளடக்கங்கள் வரவேற்கத்தக்கவை, ஆனால், அவற்றை வெளிப்படுத்தும் முறையில் கண்ணியம் தேவை எனறும் இந்திய குடும்பங்கள் மற்றும் கலாச்சாரங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையினர் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றால், சமூகத்தில் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுடன் அரசு தலையிட்டு ஒழுங்குமுறை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று அவர் கூறினார்.