fbpx

மழையில் முளைத்த காளான்..!! சமைத்து சாப்பிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி..!!

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (46). இவர் தனது வீட்டின் அருகே சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத்த காளான்களை பறித்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். மேலும், அவர் குடும்பத்தில் சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகியோரும் அந்த காளானை சாப்பிட்டுள்ளனர்.

ஆனால், காளான் சாப்பிட்ட சில மணி நேரங்களில் 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட உறவினர்கள் அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : தாய்மாமன் மகளை 4-வது மனைவியாக்கிக் கொண்ட நடிகர் பாலா..!! இம்முறை நம்புவதாக பேட்டி..!!

English Summary

All 5 people experienced diarrhea, vomiting and fainting within a few hours of eating the mushroom.

Chella

Next Post

கணவருடன் கருத்து வேறுபாடு..!! விவகாரத்து முடிவா..? முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரம்பா..!!

Wed Oct 23 , 2024
Popular actress Ramba, who is going to divorce her husband, has created a sensation, now she has given an explanation.

You May Like