TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-25ஆம் ஆண்டில் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் இந்த […]
பூமியின் பெருங்கடல்கள் கடந்த இருபது ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன, குறிப்பாக அவை இருண்டு வருகின்றன என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Global Change Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் கடல்களில் 21%க்கும் அதிகமான பகுதி, சுமார் 75 மில்லியன் சதுர கிலோமீட்டரைத் தாண்டும் பரப்பளவில் குறிப்பிடத்தக்க அளவில் இருண்டு (darkening) காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Plymouth பல்கலைக்கழகம் […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், ” ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது ”உயிரே உறவே தமிழே” என தொடங்கினேன். தமிழில் […]
தமிழ் சினிமாவில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். இவர், 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு – ராஜம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்த எம்.ஆர்.ராதா, பள்ளிக்குப் போகாமல் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்னைக்கு […]
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசாங்கத்தில் சிறப்பு அரசு ஊழியராக (SGE) தனது 130 நாள் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவித்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் குறைக்க வாய்ப்பு அளித்ததற்காக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் […]
கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மீண்டும் பரவி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் டெல்லி, […]
காந்தி (1982) திரைப்படத்திற்காக அகாடமி விருதை வென்ற பிரபல பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரும் ஆஸ்கர் விருதுபெற்றவருமான பில்லி வில்லியம்ஸ், 96 வயதில் காலமானார். பிரிட்டிஷ் சினிமாட்டோகிராஃபர் பத்திரிகை அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது, இருப்பினும் காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. திரையில் பில்லி வில்லியம்ஸின் பாரம்பரியம் பாதி நூற்றாண்டைக் கடந்த ஒரு பெரும் பயணமாகும். பல்வேறு வகையான திரைப்படங்களில், ஒளி, உணர்வு மற்றும் கதையைக் கலைப்பொருளாக பின்னிப் பிணைக்கும் அவரது அற்புத திறமை, பல […]
தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்பியாள் தொழிற்பிரிவுற்கு 8- ஆம் வகுப்பிலும் பொருத்துநர், குளிர் பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை […]
1989 – 2014 க்கு இடையில் இரண்டு தசாப்தங்களாக நூற்றுக்கணக்கான நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட 74 வயதான முன்னாள் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் ஆவர். விசாரணையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற 74 வயதான முதியவர், இரண்டு மருமகள்கள் உட்பட […]