இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது முழங்கால் வலி தான். பொதுவாக இது போன்ற முழங்கால் வலி வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதில் கூட பலருக்கு வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், உடலில் பாதரசம் குறைவதால் தான். இப்படி முழங்கால் வலி வந்துவிட்டால், உடனே கண்ட மருந்தையும் வாங்கி பூசிக்கொள்கிறோம். ஆனால் இந்த மருந்துகள் எதுவும் உங்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்காது. இது போன்ற முழங்கால் வலியில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டும்.. அது என்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதனால் பலர் இஞ்சி சளி, ஜீரணம் ஆகியவற்றுக்கு மட்டும் தான் பயன்படும் என்று நம்புகிறோம். ஆனால் உண்மையில், இஞ்சி உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் முழங்கால் வலிக்கு இது ஒரு நல்ல தீர்வு. இஞ்சியைப் போலவே பூண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் நீங்கள் காலையில் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், முழங்கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பாதாமில் உலா ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், முழங்கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகுக்கு நல்ல தீர்வு அளிக்கும். ஏனெனில் அவை கெட்ட கொழுப்புகளை நமது உடலில் சேர விடாமல், முழங்கால் வலியை கட்டுப்படுத்தும். பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மீன்களில் உள்ளது. மேலும், முழங்கால் வலிக்கு முக்கிய காரணமான வைட்டமின் டி குறைபாடை போக்க மீன் நல்ல தீர்வு. ஏனென்றால், மீன்களில் அதிக அளவு வைட்டமின் டி உள்ளது. ஒரு சிலரால், அதிக காசு கொடுத்து பாதாம், மீன் ஆகியவை வாங்கி தொடர்ந்து சாப்பிட முடியாது. இதனால் நீங்க கவலைப்பட வேண்டாம்.
தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே உங்களின் எலும்புகளை பலப்படுத்துகிறது. இதனால் முழங்கால் வலி படிப்படியாக குறைந்து விடும். ஏனென்றால், தோலில் நேரடியாக சூரிய ஒளி படும் போது, அது வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. மேலும், அதிக உடல் எடை இருந்தாலும் கட்டாயம் முழங்கால் வலி ஏற்படும். எனவே ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்..
Read more: உருளைக்கிழங்கு சிப்ஸ் சாபிட்டால் புற்றுநோய் வருமா? எச்சரிக்கும் நிபுணர்கள்..!