fbpx

குஜராத்தில் ரூ.1000 கருப்புப் பணம் கண்டுப்பிடிப்பு.. வருமான வரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

குஜராத்தில் முன்னணி தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சமீபத்தில் இந்த தொழில் குழுமத்துக்கு சொந்தமாக கெடா, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 38 இடங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர்.

இந்த சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி, ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக சிக்கி உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது. வருமான வரிசோதனையின்போது சிக்கிய தரவுகள், தொழில் குழும நிறுவனங்களின் நிறுவனர்களின் சொந்த பயன்பாட்டுக்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Maha

Next Post

இந்தாண்டு பருவமழை வழக்கத்தை விட 94% அதிகமாக பெய்துள்ளது..! வானிலை ஆய்வு மையம்

Wed Aug 3 , 2022
தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தென்மேற்கு பருவமழை பொருத்தவரையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் நேற்று வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவையில் 242 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பான மழையளவு 125 மி.மீ ஆகும். […]

You May Like