fbpx

சூப்பரோ சூப்பர்..!! விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி..!!

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடைபெற உள்ள நிலையில், ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி மாநிலம் முழுவதும் பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று துமகூரு மாவட்டத்தில் உள்ள திப்தூரில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தினார். தொண்டர்களிடம் பேசுகையில், “விவசாயிகள் எப்போதும் கடன்காரர்களாக இருக்கக்கூடாது. இதற்காக நான் எனது பஞ்சரத்னா திட்டத்தில் நிறைய திட்டங்களை இணைத்துள்ளேன்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 10 ஏக்கர் வரை வழங்கப்படும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். அதற்காக கிராம பஞ்சாயத்துகள் தோறும் அரசு பப்ளிக் பள்ளிகள் தொடங்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். நாட்டில் விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை. கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை நாசம் செய்த இளைஞர்…..! காவல் நிலையத்தில் கதறிய பெண்ணின் தாய்…..!

Fri Mar 10 , 2023
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீ புரந்தான் குளியந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் அஜித் (22) கூலி வேலை பார்த்து வரும் இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்களுடன் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அஜித் பாலியல் அத்துமீறலில் […]

You May Like