தற்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற இளம் தலைமுறையினர், தன்னுடன், தனக்கு பிடித்தவர் பேசவில்லை என்றால் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு பொருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதற்காக முயற்சி செய்யலாம், மீண்டும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என்று அதை தவிர்த்து விட்டு செல்வதுதான் இயல்பான குணம். தற்போதைய இளைஞர்கள் தனக்கு ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால், அந்த பொருள் இருக்கவே கூடாது என்று நினைக்கும் அளவிற்கு அவர்களின் மனநிலை உள்ளது இதற்கு நிச்சயம் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்புதான் காரணமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இதற்கு நடுவே அந்த இளம் பெண் திடீரென்று அந்த ஆட்டோ ஓட்டுநருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதன் பிறகு, அந்த இளம் பெண்ணான தீபாவின் வீட்டிற்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கமலீகர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அந்த இளம் பெண்ணை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனாலும் அவர் கமலீகர் தெரிவித்ததற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரம் கொண்ட கமலீகர் தான் மறைத்து வைத்திருந்த விஷப்பாட்டிலை எடுத்து, தீபாவின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியதாக தெரிகிறது.
இதற்கு நடுவே, தீபாவின் வீட்டில் நடந்த அனைத்தையும், அண்டை வீட்டு சிறுமியான ஜீவனா என்ற குழந்தை, பார்த்துள்ளார். இதன் பிறகு அந்த சிறுமி ஓடி சென்று, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இது பற்றி கூறியுள்ளார்.
ஆகவே, இதனால் அதிர்ச்சி அடைந்த கமலீகர் உடனடியாக, அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். இதன் பிறகு அந்த இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள். ஆனால், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஆட்டோ ஓட்டுநர், கமலீகர் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், இளம்பெண் தீபா உயிரிழந்தது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.