கிரிக்கெட் வீரர் ஒருவர் நிர்வாண போட்டோ பதிவிட்டதால் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் ஷாப்பிங்மால் ஒன்றில் முழு நிர்வாணமாக நிற்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரே ரசல் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
சிக்கிட்டியே சேகரு!! : இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் வெவ்வேறுவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நிர்வாண போட்டோவை பதிவிட்டதன் மூலம் பெரும் சர்ச்சை வெடித்தது. தற்போது கிரிக்கெட் வீரரின் புகைப்படமும் அந்த இடத்தை பிடித்துவிட்டது. வரும் ஐபிஎல் சீசனுக்கு உடற் தகுதியுடன் இருப்பதை காட்டவே இவர் இவ்வாறு போட்டோ பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பெரும்பாலானோர் இந்த பதிவிற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். மேலும் ரன்பீர் கபூரின் போட்டோ ஷுட்டுடன் இதை ஒப்பிட்டு பல மீம்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். நம் மீம் கிரியேட்டர்கள் சும்மாவே வல்லவர்கள். தற்போது வெறு வாய்க்கு அவள் கிடைத்தது போல சொல்லவா வேணும்!!