தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் 30 வயதை கடந்துவிட்ட நிலையில், இன்னும் திருமணம் நடைபெறவில்லை. மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு பெண் பார்க்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிகிறது. ஆனாலும், அவர்களின் திருமணத்தை கண்குளிர பார்க்கும் முன்பே இயற்கை எய்திவிட்டார் விஜயகாந்த்.