சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஆண்டுதோறும் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த […]

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் 2 லிட்டர் இலவசம் என்றும், 5 லிட்டர் வாங்கினால் 2.5 லிட்டர் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், இலவசமாக பெட்ரோல் […]

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி உருவாகக்கூடும். தமிழக பகுதிகளின் […]

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 […]

பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. விசாரணையில் நீதிபதி பொன்முடிக்கு பல கேள்விகளை […]

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிச்சேவல் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை வருவாய் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.. அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதிகள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று முறையிட்டனர்.. மேலும் பெண்கள் சிலர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.. அவர்களிடம் உரிய மனு மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை […]

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இந்த மாநாட்டில் பேசிய அமித்ஷா “ தமிழக மண் வீரம் மிக்கது, கலாச்சாரம் மிக்கது.. அதனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.. புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழக மக்களாகிய உங்களிடம் தமிழில் பேச முடியாததால் வருந்துகிறேன்.. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. நாகாலாந்து […]

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினருக்கும் அடுத்த 8 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்புள்ளது.. […]

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ஒரிசாவில் வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும்.. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய […]

ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று […]