திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மாயமானதாக புகாரளிக்கப்பட்ட நபர், இளம்பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, மதுரை அருகே உள்ள குடிநீர் தொட்டியில் சடலமாக வீசப்பட்ட பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி முதல் திடீரென மாயமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் […]

யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) டெபிட் கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சேவை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுபிஐ அல்லது ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் ரூ.2,000 அல்லது அதற்கும் குறைவாக மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ அல்லது நிதி அமைப்புகளோ நேரடியாகவோ, […]

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த சின்னமாயாகுளம் கிராமம் அருகே உள்ள காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் இன்று காலை இரண்டு உடல்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இருவரும் மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக ஏர்வாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் ஏர்வாடி போலீஸார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் சம்பவ […]

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் அருகே ஆகாஷ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்த வழக்கில் இவர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நீதிமன்ற வழக்கு தொடர்பாக இன்று […]

திருமண பந்தம் என்பது இரு மனங்கள் இணையும் உன்னதமான பயணம். புதிய வாழ்க்கையைத் தொடங்கும் புதுமணத் தம்பதிகள், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் திருவுருவ அமைப்பிலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் இல்லறத்தை இனிமையாக்கும் 5 ஆழமான வாழ்வியல் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். கூர்ந்து கவனியுங்கள் (பெரிய காதுகள்): விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் ‘அதிகம் கேட்க வேண்டும்’ என்பதை உணர்த்துகின்றன. தம்பதியரிடையே ஏற்படும் பல முரண்பாடுகளுக்குக் காரணம், துணையின் உணர்வுகளை முழுமையாகக் […]

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை நோக்கித் திரும்பிய வாகனங்கள், செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காகச் சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை முடிவடைந்ததை ஒட்டி இன்று காலை முதலே தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிப் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுக்க தொடங்கின. இந்த நிலையில், சென்னை – […]

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 180 அலுவலர்களுக்கு ‘முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பணியில் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் காட்டியவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தப் பதக்கங்கள், இந்த ஆண்டு கீழ்க்கண்டவாறு துறைவாரியாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளன. காவல்துறை: தலைமைக் காவலர் முதல் எஸ்பி (SP) […]

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இளம் பெண் ஒருவரை, வேறு நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாலினி குரியா (23) என்ற பெண், சென்னையில் இருந்து தனது இரண்டு தோழிகளுடன் ரயிலில் ரங்கியா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்களை வரவேற்பதற்காக உடால்குரி மாவட்டத்தைச் சேர்ந்த […]

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும் என்றும், வீட்டில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தபடி பேசுவதையெல்லாம் தமிழகத்தில் அரசியல் எனக் கருத முடியாது எனவும் அவர் சாடினார். முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் மிகத் தெளிவாக இயங்கி வருவதாகவும், தமிழர்கள் உலக […]

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் ஏறும் தளத்தை (Pickup Plaza) மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கி. ராம்மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முனையத்திற்கு முன்பாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பயணிகள் ஏறும் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கும் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி உட்பட ரூ. 22.88 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, பயணிகளை […]