ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இன்று இந்தியாவில் உள்ள […]

விஐடி (VIT) போபால் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு கடும் பதற்றம் நிலவியது. வளாகத்தில் மஞ்சள் காமாலை பரவியதால், மாணவர்கள் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தில் மோசமான சுகாதாரம் மற்றும் மாசுபட்ட தண்ணீரே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறினர். சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், மத்தியப்பிரதேசம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள இந்தூர்–போபால் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது பல வாகனங்கள் தீவைக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழக சம்பந்தப்பட்ட சொத்துக்கள் […]

பெங்களூருவின் யஷ்வந்தபுரா பகுதியில், திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் உறவினர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, யஷ்வந்தபுராவில் உள்ள முத்யாலம்மா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மராஜூ (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்தார். பக்கத்து வீட்டார் என்ற முறையில் ஏற்பட்ட சாதாரண பழக்கம், நாளடைவில் […]

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ‘சார்ட்டர்’ விமானத்தின் மூத்த விமானி, விமானப் பணிப்பெண் ஒருவரை நட்சத்திர விடுதி அறையில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார், விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து பெங்களூரு வந்த சார்ட்டர் விமானத்தின் விமானியாக 60 வயதான ரோகித் சரண் என்பவரும், 26 வயதான இளம்பெண் ஒருவர் பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளனர். விமானம் […]

இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகத் திகழும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவு கசிவுகளை தடுக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான மாற்றத்தை வரும் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்போது, இனிமேல் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் அச்சிடப்படாது என்று UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சமீபத்தில் ஆன்லைன் […]

பிரதமர் நரேந்திர மோடி குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இவை வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள் என்று அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு தினத்தை ஒட்டி குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொறுப்பையும் பிரதமர் வலியுறுத்தினார், மேலும் 18 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவிப்பதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று […]

உத்தரப்பிரதேச மாநிலம் பரசுராம்பூர் பகுதியில் திருமணம் முடிந்து வெறும் 7 நாட்களே ஆன நிலையில், புதுமணப் பெண் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரசுராம்பூரைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் அனீஸ் (25) என்பவருக்கும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ருக்ஷனா (20) என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து ஒரு வாரமே […]

கேரள மாநிலம் கொல்லம் கரிக்கோடு பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன் தன் மனைவி மீது சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கோடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (54) மற்றும் அவரது மனைவி கவிதா (46) ஆகியோருக்கு ஒரு மகள் உள்ளார். மதுசூதனனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த முந்தைய […]

இந்தியப் பெண் ஒருவர் ஷாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அருணாச்சல பிரதேச விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இங்கிலாந்தில் வசிக்கும் பென் வங்க்ஜோம் தொங்க்டொக் என்ற இந்திய பெண், நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காயில் மூன்று மணி நேர இடைநிறுத்தம் இருந்தது. ஆனால், தனது பாஸ்போர்ட்டில் பிறந்த இடமாக அருணாச்சல் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்ததால், சீன குடிவரவு பணியாளர்கள் […]

சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கிக் கடன் மூலம் இந்தக் கனவை நிறைவேற்றுவது எளிதல்ல. இந்த சிரமத்தை குறைக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு தற்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அர்பன் (PMAY-U) 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், நகர்ப்புறத்தில் வீடு வாங்கத் திட்டமிடும் மக்களுக்குப் பெரிய பொருளாதார […]