டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் ஓட்டியதாக கூறப்படும் டாக்டர் உமர் உன் நபி தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், நபி “தற்கொலைப் படை தாக்குதல்” (suicide bombing) என்ற எண்ணம் எப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் பேசுகிறார். நவம்பர் 10க்கு முன் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில், உமர் நபி ஒரு அறையில் தனியாக அமர்ந்து […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகன் சவுரப் (30). சவுரப்புக்குத் திருமணம் ஆன நிலையில், தந்தை சுபாஷ், தனது மருமகள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற உறவு குறித்து மகன் சவுரப்புக்கு தெரியவந்தபோது, அவர் தந்தை சுபாஷுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில், […]

செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை மேலும் தீவிரமாகியுள்ளது. இன்று அதிகாலை 5:15 மணிக்கு, அமலாக்கத்துறை Enforcement Directorate (ED) அதிகாரிகள் டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள Al-Falah குழுமத்துடன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகள், ‘ஷெல்’ நிறுவனங்கள், தங்குமிட உதவிகள் மற்றும் சந்தேகமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக நடைபெறும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும். அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் டெல்லி அலுவலகத்திலும் […]

கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் […]

அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல். அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான கட்டணம் 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சம் பிரதிகளைக் கொண்ட நாளிதழ்களில் கருப்பு வெள்ளை விளம்பரங்களுக்கு ஒரு சதுர சென்டி மீட்டருக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் ரூ. 47.40 என்பது 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.59.68 ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வண்ண விளம்பரங்களுக்கான […]

கடந்த ஆண்டு டாக்காவில் அரசு எதிர்ப்பு மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” குறித்த வழக்கில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஹசினா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து, அதற்கு பின் டெல்லியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு வீட்டில் தங்கி வருவதாக, அவரது […]

மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர்.. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் நவோதயா […]

இந்திய ரயில் நிலையங்களை விமான நிலைய பாணி வசதிகளுக்கு இணையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பீட்சா ஹட், பாஸ்கின் ராபின்ஸ், ஹால்டிராம்ஸ், பிகானர் வாலா போன்ற பிரீமியம் பிராண்ட் உணவு விற்பனை நிலையங்களை ரயில் நிலையங்களில் அமைக்க ரயில்வே இப்போது அனுமதித்துள்ளது. இடம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏலம் நிலையங்களில் இந்த பிரீமியம் விற்பனை நிலையங்களுக்கான இடம் ஐந்து ஆண்டுகளுக்கு […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா பகுதியில், திருமண வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால் தூண்டப்பட்ட ஆத்திரத்தில், 35 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி (35) என்ற பாதிக்கப்பட்ட பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வேன் டிரைவராக […]