இனி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உளவியல், சுகாதாரம் தொடர்பான படிப்புகளை இனி தொலைதூர கல்வி அல்லது ஆன்லைன் முறை கற்க முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்த படிப்புகளை ஆன்லைனில் வழங்குவதைத் தடை செய்துள்ளது. புதிய உத்தரவு ஜூலை-ஆகஸ்ட் 2025 கல்வி அமர்விலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் நடைமுறை சார்ந்த கல்வியில் தரத்தைப் பராமரிக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உளவியல், […]

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் நெருல் பகுதியில் சில தனியார் பார்கள் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆபாச நடனம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை இந்த பார்கள் மூலம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவில், தனியார் பாரில் நடன அழகிகள் ஆடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவர்களிடம் பணத்தை வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]

திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்த கணவனை, தொடர்ந்து கேலி செய்து வந்த மனைவியின் செயல்பாடு, மன ஒடுக்குமுறையாகக் கருதப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குரூத் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றும் மனைவி, வழக்கறிஞராக இருந்த தனது கணவனின் வேலை இழப்பை அவமானப்படுத்தியதுடன், நிதிச்சுமையை காரணமாக்கி தேவையற்ற பணம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். மனைவியின் இந்த மாறுபாடுகள் அவரது மனநிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறி, கணவர், விவகாரத்து கோரி […]

அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா போன்ற மிகப் பெரிய இ-காமர்ஸ் தளங்களின் வளர்ச்சியும், அதே நேரத்தில் quick-காமர்ஸ் தளங்கள் (உதா: Blinkit, Zepto) ஆகியவற்றின் வருகையும் காரணமாக, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், மின்னணு சாதனங்கள், ஆடைகள், மளிகை மற்றும் வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் ஆகிய அனைத்தையும் மக்கள் வீட்டுக்கே நேரடியாக வாங்கும் வசதியை பெற்றுள்ளனர். இதன் விளைவாக, டெலிவரி பாய்கள் மீதான தேவை பெரிதும் […]

டெல்லியில் மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரையை எடுத்துக்கொண்ட 18 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 18 வயதுடைய இளம்பெண், மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு deep vein thrombosis என்ற ஆழமான நரம்பு ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தார், ஆனால் அவரது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த சிறுமி […]

முதல் முறையாக கடன் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், சிபில் மதிப்பெண் (CIBIL Score) இல்லாததால் மட்டுமே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மக்களவையில் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி, “முன்னர் எந்த வகையான கடனும் எடுத்திருக்காத, க்ரெடிட் வரலாறு இல்லாத நபர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் […]

நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற […]