பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள PG தங்குமிடங்கள் மிகவும் பிரபலமானவை. இதை வேலைக்காக நகரம் வருகிற இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், புது பட்டதாரிகள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த […]

பிரதமர் நரேந்திர மோடி இன்ற் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து […]

60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த மசோதா உடனடியாக தேர்வுக்குழுவுக்கு அனுப்பட்டது.. நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவில் முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.. இந்த சூழலில் புதிய மசோதாவை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி முறையாக […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாததால், மனைவிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்த கணவருக்கு கடைசியில் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண வாழ்க்கை என்பது கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் புரிந்துணர்வும் கொண்டு இணைந்த வாழ்க்கை ஆகும். ஏதாவது சிக்கல்கள் வந்தாலும் பொறுமையாக அணுகி, பேசிக்கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அனைவருக்கும் நினைத்தது போல அமையாது. சிலர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிலருக்கு குடும்ப […]

நாக்பூரில் நடந்த ஒரு துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டியபடி ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று மதியம் தியோலாபர் காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மோர்பட்டா அருகே நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கியார்சி அமித் யாதவ் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் சம்பவ […]

2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என […]

கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.. நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எம்.பி.க்கள் பேரணியாக நடந்து சென்றனர்.. 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 300 பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொண்டதால் இன்று டெல்லியில் பரபரப்பு நிலவியது.. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்தது, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் அவரது […]