fbpx

”நமது நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை 134-வது வார்டில் வசிக்கும் மக்களின் சேவைக்காக உருவாக்கியுள்ள உங்கள் மாம்பலம் ஆப் (UMA) எனும் செயலியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். …

பொதுக்குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார்‌ மூலம்‌ ஊர்‌ திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில்‌ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருவள்ளூர்‌ மாவட்டம்‌, வானகரம்‌, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்‌ மண்டபத்தில்‌ 11.07.2022 அன்று நடைபெற்ற …

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இந்நிலையில் நேற்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் …

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் தரப்பு முறையீடு செய்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பும் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். …

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்ததாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, …

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக …

தன்னை மீறி அதிமுக வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்ளக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டிய வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் …

நான் இருக்கும் வரை வரை இந்த இயக்கத்தை யாரும் அபகரிக்கவோ, அழித்து விடவோ முடியாது என்று சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார்.

அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்த விழாவில் சசிகலா பேசியதாவது, ”எம்.ஜி.ஆர். அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது. எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வழிநடத்தினேன். நம் அனைவரின் எண்ணமும் …

மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்..

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி உள்ளார்… இந்த அறிவிப்பு குறித்து, இணை வேந்தர் என்ற முறையில் …

ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, …