fbpx

’தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் …

இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கவே உதவுகிறது என்ற கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சாஜி செரியன் பேசுகையில், ”அழகான …

காலரா பரவல் காரணமாக தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”புதுச்சேரியில் இதுவரை 39 பேருக்கு காலரா இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை கண்காணித்து வருகிறோம். குறிப்பாக, நாகை மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் …

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்..

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, தமிழக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது… காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை …

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி-யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம், பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளது செல்லாது என்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இருந்தால்தான் …

தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 5 பேரையும் காங்கேசன்துறை கடற்படை …

வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்துளது..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் …

ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் …

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி …

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ”இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2,977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை …