தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதன் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக இன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் […]
உக்ரைனின் செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர் ரஷ்ய ராணுவம் உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான Kherson ஐக் கைப்பற்றியதாக உக்ரேனிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதைத் தவிர, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக இரண்டு உக்ரேனிய துறைமுகங்களைக் கைப்பற்றியது மட்டுமின்றி நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்தின் மீது குண்டுவீச்சுக்கு அழுத்தம் கொடுத்தது. அதே நேரத்தில் கெய்வ் அச்சுறுத்தும் […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பகல் நிலவு’ சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அசீம். அந்த சீரியலில் நடிகை ஷிவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பிறகு இருவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற தொடரில் மீண்டும் நடிக்க சில எபிசோடுகளுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்த அசீம், தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில், கதை சொல்லும் டாஸ்கில் […]
500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் கிடையாது என்ற குறுஞ்செய்தி பரவி வரும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. சமீபத்தில் பரவிய குருஞ்செய்தியில், வீட்டு உபயோகத்திற்கு 500 யூனிட்டுகள் (2 மாதங்களுக்கு) மேல் மின்சாரம் பயன்படுத்தினால், 100 யூனிட் இலவசம் இல்லை என்ற தகவல் வந்தது. அதில் 2 மாதங்களுக்கு சுமார் 510 யூனிட் உபயோகித்தால், வீட்டு உபயோகத்திற்கு சுமார் […]
பயனர்களின் சாதனங்களில் இருந்து அதிக இணையத்தை பயன்படுத்தி, சார்ஜை வேகமாக குறைக்கும் 16 ஆண்ட்ராய்டு செயலிகளை Google Play Store நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல Ars Technica இன் அறிக்கையின்படி, பாதுகாப்பு நிறுவனமான McAfee ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் சார்ஜை குறைக்கும் அளவிற்கு செயலிகள் இருக்கிறது என கண்டறிந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் Google Play Store-இல் இருந்து 16 செயலிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.464 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், சென்னை மண்டலத்தில் 38 […]
வயதான மாமியாரை பல ஆண்டுகளாக கொடூரமாக சித்ரவதை செய்து வந்த மருமகளால் மாமியாரின் கண்பார்வை பறிபோன சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்த புந்தலதழம் பகுதியைச் சேர்ந்தவர் நளினி (67). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் இவர் தனது மகன் – மருமகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வயதான மாமியார் தங்களுடன் இருப்பது பிடிக்காத மருமகள் அவரை […]
இயக்குனர் ஒருவருடன் காதலில் இருக்கும் பிக்பாஸ் ரச்சிதா, விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல சீரியல் வாய்ப்பினை பெற்றார். சமீபத்தில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா, தொலைக்காட்சி சேனலில் […]
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சமீபத்தில், அந்த குழந்தையின் முதலாம் […]