பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து வெளியேறிய நிலையில், அவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, […]

கையில் சுத்தியலுடன் கே.ஜி.எஃப் யாஷை மிஞ்சும் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சனின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். மேலும், தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். வாரிசு […]

நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தனது விடா முயற்சியாலும், அசாதாரண நடிப்பாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துக் கொண்டவர். இவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். பண்டிகை நாட்களில் இவரிடம் வாழ்த்து பெறுவதற்காக, இவரது இல்லம் முன்பு ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதன்படி, தீபாவளித் திருநாளான […]

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில அதி தீவிர புயலாக வலுபெறும் என்றும் வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், சாகர் தீவில் இருந்து தெற்கு பகுதியில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் பரிசாலில் இருந்து தெற்கு – தென்மேற்கு திசையில் 580 கிலோ […]

விஜயின் சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய சந்தானம் மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம்.  இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேபோல் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சர்கார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் உள்ளிட்ட படங்களிலும் இவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஏ.ஆர். […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

ஆரணியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் அம்மிகல்லால் தாக்கி தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஓட்டுநர் செந்தில்குமார்-உமாராணி தம்பதி. இவர்களுக்கு மதன் (19), அருண் (16) ஆகிய 2 மகன்களும் ஜீவிதா என்ற ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த […]

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்த மக்கள் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதும் […]

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.   டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால், வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தது […]