எப்போதும் சோர்வாக இருக்கிறதா? சிறிது வேலை செய்தாலே உடல் பலவீனமாகிறதா? முடி அதிகமாகக் கொட்டுகிறதா? இதற்குப் பின்னால் இரும்புச்சத்துக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உணவில் போதிய இரும்புச்சத்து கிடைக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் உருவாக இரும்புச்சத்து அவசியம். இது குறையும்போது ரத்தசோகை ஏற்படலாம். அதன் காரணமாகச் சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உணவில் இரும்புச்சத்து நிறைந்த […]

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்பநிலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் வரலாறு காணாத வானிலை மாற்றங்களும் இயற்கை பேரிடர்களும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சர்வதேச வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது ‘எல் நினோ’ உருவாகும் சூழலில், நடப்பாண்டில் இந்த வெப்பநிலை உயர்வு 3.0 டிகிரி செல்சியஸ் வரை எகிறி ‘சூப்பர் எல் நினோ’ […]

இந்தியாவில் சில்லறை வர்த்தக பணவீக்கமானது கடந்த 23 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு உணவுப் பொருட்களின் திடீர் விலையேற்றமே பிரதான காரணியாக அமைந்துள்ளது என்பது அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, சமையலறைக்கு தேவையான வெங்காயம், சர்க்கரை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு ஆகிய நான்கு முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் […]

உடலுக்கு தேவையான புரதத்தைப் பெற அசைவ உணவுகள் மட்டுமே வழி என்ற எண்ணம் பலரிடமும் உண்டு. குறிப்பாக தசை வளர்ச்சிக்காக உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்பவர்கள் கோழிக்கறியை அதிகளவில் நாடும் சூழலில், இறைச்சியில் உள்ள அதிக கலோரிகள் இதய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இதற்கு மாற்றாக, அசைவத்தை விட அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்களைக் கொண்ட சிறந்த 5 சைவ உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முதலில், ஒரு கப் […]

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள், வீட்டை அலங்கரிப்பது எனப் பல செலவுகள் வரிசைகட்டும். பண்டிகை நெருங்கிய பிறகுதான் பலரும் ஷாப்பிங் செய்யத் தொடங்குவதாக நினைத்தாலும், உண்மையில் அதற்கான செலவுகள் குறித்த திட்டமிடல் அதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. யாருக்கு என்ன பரிசு வாங்குவது, வீட்டைப் புதுப்பிக்க வேண்டுமா, புதிய மின்னணு சாதனங்களை வாங்கலாமா எனப் பல விருப்பங்கள் பட்ஜெட்டைத் தீர்மானிக்கின்றன. ஆனால், பண்டிகைக் கொண்டாட்டத்துக்காகச் செலவு செய்வதில் […]

தமிழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை இன்று நாளை (அக்டோபர் 14) வெளியாகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அட்டவணையை வெளியிடுகிறார். 10ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மொழிப் பாடங்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து முதன்மை மற்றும் தொழிற்கல்விப் […]

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் முழுநேரக் கட்சிப் பணிகளில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்காக, தன்னை எம்பி பதவியில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கும், மாநிலங்களவை தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு எளிய தொழிலாளியின் […]

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கிய ஒப்பந்தத்தை முறைகேடு எனக் கூறி ரத்து செய்த தவெக அரசு, தற்போது இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்க முடிவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய முதலமைச்சர் நிர்வாக திறனற்ற ஒரு ‘டம்மி முதல்வர்’ என்பதற்கு தமிழகம் இவ்வளவு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்வதே சான்று என்று […]

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்த அழகுவேல் – சுகன்யா தம்பதிக்கு 7 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் சுகன்யா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது இரண்டு பிள்ளைகளையும் ஈத்தாமொழியில் வசிக்கும் தனது தம்பி ராஜலிங்கம் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அங்கு சிறுவர்களுடன் ராஜலிங்கம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களது உடலில் ஆங்காங்கே தீக்காயங்கள் மற்றும் தழும்புகள் இருப்பதை கண்டு […]

தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யை கேட்டு ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள். மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். […]