40 வயதுக்கு பிறகு பெண்களின் உடலில் இயற்கையாகவே பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தை (Menopause) நெருங்கும் பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியம், இதய நலம், உடல் எடை மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, 40 வயதுக்கு மேல் பெண்கள் சோர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை, திடீர் உடல் எடை அதிகரிப்பு, அதிக வியர்வை, […]
உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் […]
இந்துக் சமயத்தில் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தியுடன் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, மன அமைதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆன்மிக அறிஞர்கள் கூறுவதன்படி, செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள முருகன் அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. வீட்டிலேயே வழிபடுபவர்கள், விளக்கேற்றி மனமுருகி பிரார்த்தனை செய்யலாம் […]
வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் தற்போது பல பெண்களிடையே அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக துணி பரிசுப் பைகள் (Reusable Fabric Gift Bags) தயாரிப்பு தொழில் பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், துணியால் செய்யப்பட்ட பரிசுப் பைகள், ஷாப்பிங் பைகள் மற்றும் ரிட்டர்ன் கிப்ட் பைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. […]
மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. முதல்வர் விஜய்யின் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தாத […]
மேற்கு வங்கத்தில் கேஸ் சிலிண்டர் மானிய தொகையை சரிபார்க்க வங்கிக்கு சென்ற ஏழை பெண்ணின் கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்தாலி பகுதியை சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக். ஜரி தையல் தொழில் செய்து வரும் இவர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர். இந்நிலையில், மத்திய அரசின் சமையல் […]
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் பால் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சீராக விநியோகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் மட்டுமின்றி பால்கோவா, பாதாம் […]
தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய செய்தி தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களான வைகைச்செல்வன், கலைராஜன், மகேந்திரன், புகழேந்தி மற்றும் அமெரிக்கை நாராயணன் ஆகியோருக்கு தவெகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், […]
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, காவிரி நதிநீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து சுமுகத் தீர்வு காண்பதற்காக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்திக்க தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழக அரசு […]

