fbpx

மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி 24 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சிறுமியை ஏமாற்றி ஒருவர் கர்ப்பம் ஆக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது […]

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 2022 – 2023ஆம் கல்வியாண்டில், ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, […]

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தின் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார்.. மேலும் ரணில் விக்ரம சிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவிவிலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் […]

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடல் குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசவே மருத்துவமனை ஊழியர்கள் அந்த குப்பைத் தொட்டியை சோதனை செய்தனர். அப்பொழுது குப்பைத் தொட்டியில், பிறந்த குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை தொட்டியில் வீசியிருந்தனர். உடனே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ட்ரெய்னிங் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையிலான வந்தவாசி தெற்கு காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். […]

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்களின் விற்பனை பற்றி ரகசியமாகத் தகவல் தெரிவித்தால், உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கண் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடங்கி வைத்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”உலகம் முழுவதிலிருந்தும் 3,500 கண் மருத்துவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளதாகவும், கண் மருத்துவச் சிகிச்சையில் பயன்படுத்தப்பட உள்ள […]

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார். மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது […]

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த 2013-ம் ஆண்டு, நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி கிடைக்கவில்லை.. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் கம்பெனியின் பணியாளர்களுக்கான குடியிருப்பில் 19 வயது இளைஞன் தனது தாயையும் மூத்த சகோதரியையும் நேற்று கொலை செய்ததாக காவல்துறையினர், தெரிவித்தனர். குஸ்முண்டா, ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் அமன் தாஸ், வீட்டின் குளியலறையில் தனது தாய் லக்ஷ்மி(44), மற்றும் தனது சகோதரி […]

ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கே.பி.முனுசாமி கூலி ஆட்கள் போன்று காசுக்காக வேலை செய்கிறார். எட்டப்பன் போல் செயல்படுகிறார். திமுகவின் சில அமைச்சர்களுக்கு அவர் கொத்தடிமையாக செயல்படுகிறார். பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என சொல்ல […]

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஒரு சிலஇடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை […]