fbpx

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் (45). இவருக்கு கடந்த வருடம் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை கிடைத்தது. இதனால் மதுரை அரசரடியில் முத்துராமலிங்கம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி, திருச்சுழி ரோட்டில் காரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில், முத்துராமலிங்கம் இறந்து கிடப்பதாக அங்குள்ள மக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் […]

பள்ளி, கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகப் போதை பழக்கம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களில் கூட இந்த போதை பழக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. போதைப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் அதிகம் […]

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு தலீபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தலீபான் தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை சமாளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை […]

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் தைலம்மாள் (75). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் எல்லப்பன் இறந்து விட்டதால், தைலம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அதே பகுதியில் தைலம்மாளின் கடைசி மகனான மெய்வேல் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தைலம்மாளுக்கும், செல்விக்கும் அடிக்கடி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு சண்டை […]

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.. 2 வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது.. கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான் என்று கூறப்பட்டாலும், […]

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை, நில அபகரிப்பாளர்கள் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம்பியாரி சகாரியா (38) என்ற பெண்ணின் குடும்பத்திற்கு, அரசு நலத்திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின்னர் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு சகாரியாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்பியாரி சகாரியா, தனது […]

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றிய கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்து, அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இடம் பெற்றிருந்தவர் நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா ஆவார். இவர், டெல்லியில் […]

காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் இரண்டு பேர் உயிரிழந்த எடுத்து காலரா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதிக அளவில் பரவி வருகிறது. அரசு பொது மருத்துவமனையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள், அதிக அளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர் மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுவோர் […]

மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் மருந்து கடை வைத்துள்ளார். உமேஷ் கோல்கே நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 21-ந் தேதி மருந்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ […]