fbpx

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் […]

பொதுக்குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார்‌ மூலம்‌ ஊர்‌ திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில்‌ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருவள்ளூர்‌ மாவட்டம்‌, வானகரம்‌, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்‌ மண்டபத்தில்‌ 11.07.2022 அன்று நடைபெற்ற கழகப்‌ பொதுக்குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார்‌ மூலம்‌ ஊர்‌ திரும்பும்போது […]

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வரும் 14-ம் தேதி பகல் 12 மணி முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் நடைபெற்ற பொது தேர்வினை எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 14-ம் தேதி மதியம் 12 […]

பிரபல நடிகரும், இயக்குனருமான அமீரின் தாயார் பாத்து முத்து பீவி வயது மூப்பு காரணமாக காலமானார்.   தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மற்றும் நடிகர் அமீர். நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடித்த மௌனம் பேசியதே  படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர், இயக்குனர் அமீர். மதுரையை பூர்வீகமாகக் கொண்டவரான அமீர், மதுரையை மைய்யமாக வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி […]

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இந்நிலையில் நேற்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட பெண் ஒருவர் அமைச்சரிடம் மனு […]

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் தரப்பு முறையீடு செய்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பும் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக […]

பிரபல WWE வீரர் கிரேட் காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மல்யுத்த விளையாட்டு போட்டியான WWE மூலம் பிரபலமானவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காளி. ‘தி கிரேட் காளி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர், பஞ்சாபில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றை காரில் கடக்க முயன்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த […]

பிரபல நடிகரும், இயக்குநருமான அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு இறுதி சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு இயக்குனர் அமீர் ஹஜ் புனித பயணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அமீர் தாயார் மறைவுக்குத் திரையுலகைச் […]

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்ததாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கூட 2, 3 […]

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான, சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருக்கும் 80 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது டெல்லி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரே, சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஜெயில் அதிகாரிகள் […]