fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம்தான் ஓடும்!. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

    Indus River Water: சிந்து நதியில் நமது தண்ணீர் பாயவேண்டும் இல்லையென்றால் இந்தியர்களின் ரத்தம்தான் ஓடும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி பேசியுள்ளது கண்டனத்தை எழுப்பியுள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்.

    பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். சுற்றுலா விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை. முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

    மத்திய அரசு சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தானும் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதித்தது. பாகிஸ்தானும் வாகா எல்லையை மூடியது.. சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து பாகிஸ்தான் அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் இருநாட்டு உறவுகளிடையே தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, ஆக்ரோஷமான மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளார். ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சிந்து நதிக்கரையில் நின்றுகொண்டு, சிந்து நதி நம்முடையது என்றும், அது நம்முடையதாகவே இருக்கும் என்றும் இந்தியாவிடம் கூற விரும்புகிறேன். ஒன்று நமது தண்ணீர் இந்த நதியின் வழியாகப் பாயும் அல்லது அவர்களின் இரத்தம் அதில் பாயும்” என்று அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் முழு நாட்டையும் துக்கத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியிருக்கும் நேரத்தில், இந்த அறிக்கை இந்தியாவிற்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஒரு வெளிப்படையான செயலாகக் கருதப்படுகிறது.

    மேலும், இந்தியா “சிந்துவைத் தாக்கியது” என்று கூறிய பூட்டோ, இந்தியா நம்மை விட அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் மக்கள் துணிச்சலானவர்கள் என்று அவர் கூறினார். நாங்கள் எல்லைகளிலும் பாகிஸ்தானுக்குள்ளும் போராடுவோம். எங்கள் குரல் இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும். இந்த அறிக்கையிலிருந்து, பயங்கரவாதத்தைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானின் அரசியல் தலைமை ஆக்ரோஷமான தேசியவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்பது தெளிவாகிறது, இதன் காரணமாக இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் மேலும் குறைந்து வருகின்றன.

    Readmore: ஒலியை விட 5 மடங்கு வேகம்!. 6,100 மைல் வேகத்தில் சீறி பாயும்!. அதிநவீன ஏவுகணை சோதனை செய்து வரலாறு படைத்த இந்தியா!

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]