சவுதியில் இந்தியர்களுக்கு எச்சரிக்கை.. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனத் தூதரகம் அறிவுரை!

aa8023147d5507d527174f910a1cf588f84e9556b293c380928bf872b6abc231

சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்புடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்கவும் வலியுறுத்தியுள்ளது.


சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இந்தியர்கள் தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேவையான சூழலில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிகழ்வுகள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள் மற்றும் செய்திகளைச் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் VFS Global வாயிலாக வழங்கப்படும் சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கான உதவிகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 80024 71234 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம்.

சவுதி அரேபியாவுக்கும் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், சவுதி அரேபியாவின் முக்கிய விமான நிலையங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா விமான நிலையம் தொடர்பான தாக்குதல் செய்திகள் பாதுகாப்பு கவலையை அதிகரித்துள்ளன.

மேலும், ஏவுகணைகளை இடைமறித்ததாகச் சவுதி தரப்பில் தகவல் வெளியான நிலையில், அங்கு வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு குறித்த கவனம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சவுதியில் உள்ள இந்தியர்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read: தாராபுரத்தில் அதிமுக.. மதுராந்தகத்தில் திமுக.. தவெகவைத் தடுக்க ரகசியத் திட்டமா?

Saranya

Next Post

BREAKING| தமிழ் வம்சாவளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!.

Fri Oct 9 , 2026
2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான முன்னாள் நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனவெறிக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வாதாடியது, சர்வதேசக் குற்றவியல் சட்ட நடைமுறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது மற்றும் ஐ.நா.வின் மனித உரிமை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியது என பல தசாப்தங்களாக அவர் ஆற்றிய மனித உரிமைப் பணிகள் உலக அரங்கில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. […]
Navanethem Pillay nobel

You May Like