விஜய்க்கு எதிராக திமுக – அதிமுக கூட்டணி..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்..!

Vijay Stalin Eps 2025

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.


விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால், தவெகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 107 ஆக குறையும். இதனால், குறைந்தது மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகிறது. தற்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள்ளது.. மேலும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதவுக்கு விஜய்க்கு தேவை..

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தலா 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமக 4 இடங்களிலும், பாஜக மற்றும் அமமுக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இக்கட்சிகளில் சிலர் ஆதரவு அளித்தால்தான் தவெகவிற்கு தேவையான எண்ணிக்கை கிடைக்கும் நிலை உள்ளது.

இந்த அரசியல் கணக்குகளுக்கு மத்தியில் தான், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2.5 ஆண்டுகள் ஸ்டாலின் முதல்வராக இருப்பார் என்றும், 2.5 ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருப்பார் என்றும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “புதிதாக அமையவுள்ள அரசுக்கு அடுத்த 6 மாதம் எந்த தொந்தரவும் அளிக்க மாட்டோம். அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்குவோம்” எனக் கூறி அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த இழுப்பறிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். குறிப்பாக திமுக – அதிமுக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Read more: CM ஆக பதவியேற்றதும் விஜயின் முதல் கையெழுத்து இதுதான்.. தமிழக மக்களுக்கு மெகா இன்ப அதிர்ச்சி..!

English Summary

DMK – AIADMK alliance against Vijay..? Stalin puts an end to the rumors..!

Next Post

கலைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் நக்கல் பதிவு..!

Thu May 7 , 2026
The artist would never have dreamed of sharing Vijay's old photo and posting a fake director post..!
vijay kalainjar 1

You May Like