குழந்தைக்கு எப்போது என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் புதிய பெற்றோர்களுக்கு பல கேள்விகள் இருக்கும். அதில் சர்க்கரையை எப்போது அறிமுகப்படுத்தலாம் என்பதும் முக்கியமான ஒன்று. குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே அதிக சர்க்கரை பழக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது, எதிர்கால ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக குழந்தையின் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிடைக்கும் உணவு […]

“கையில் பணம் இருக்கிறது என்பதற்காக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை” — தனியாக இருந்த ஒரு தருணம் நடிகை லதா ராவுக்கு இந்த உண்மையை ஆழமாக உணர்த்தியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அருகில் இருந்து ஒரு வார்த்தை கேட்கக்கூட யாரும் இல்லாத சூழலை சந்தித்த அவர், பணத்தைவிட உறவுகளின் மதிப்பு எவ்வளவு பெரியது என்பதை உருக்கமாக பகிர்ந்துள்ளார். ஹைதராபாத்தில் தற்போது தனியாக ஒரு அறையில் தங்கியிருக்கும் லதா ராவுக்கு உடல்நிலை […]

கேரளாவில் நள்ளிரவில் நடந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. குருவாயூர் பகுதியில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். இரவு சுமார் 11.40 மணியளவில் பனம்பிக்குன்னு பகுதியில் […]

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 17,500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்ட […]

பெங்களூரு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக நம்ப வைத்து, பெண் பயணியை பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஊழியரை ரயில்வே நிர்வாகம் உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஒடிசா மாநிலம் நுவாபடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரண்டு உறவினர்களுடன் வேலை தேடி பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த புதன்கிழமை திட்லாகர் பகுதியில் இருந்து ரயிலில் பயணத்தை தொடங்கியுள்ளனர். […]

பொலிவியாவில் ராணுவ முகாமுக்குள் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியிலேயே வெடிபொருட்கள் […]

தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், முக்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பலரும் வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். வங்கி லாக்கரில் பொருட்களை வைத்துவிட்டால் அவை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும், ஏதேனும் திருட்டு நடந்தால் பொருட்களின் முழு மதிப்பையும் வங்கி வழங்கும் என்றும் சிலர் நினைக்கின்றனர். ஆனால், வங்கி லாக்கர் தொடர்பான விதிகளில் இதற்கு வரம்புகள் உள்ளன. ரிசர்வ் வங்கி (RBI) வகுத்துள்ள விதிகளின்படி, லாக்கரில் […]

காதல் மற்றும் திருமணம் தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் நிலையில், பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது ரூபியும், இரண்டு குழந்தைகளின் தாயான சந்தியாவும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட […]

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல் போனதால், அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

வீட்டிலேயே மட்டன் பிரியாணி செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் அதே மணமும் சுவையும் வர வேண்டும் என்பது பலரது ஆசை. ஆனால் அரிசி பதம், மட்டன் வேகும் நிலை, மசாலாவின் அளவு என சில விஷயங்களில் சிறிய தவறு ஏற்பட்டாலே பிரியாணியின் சுவை மாறிவிடும். இதனால் ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய சில முக்கியமான சமையல் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பது உதவும். முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து, தயிர், […]