கொழுப்பு கல்லீரல் பிரச்சினை தற்போது பலரிடம் காணப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், பலரும் அதை கவனிக்காமல் விடுகின்றனர். வயிற்று உப்புசம், செரிமானக் கோளாறு போன்றவற்றை சாதாரண வயிற்றுப் பிரச்சினையாக நினைத்து புறக்கணிக்கும் நிலையும் உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தொந்தரவுகள் இருந்தால் கவனம் செலுத்துவது அவசியம். கொழுப்பு கல்லீரலை கட்டுப்படுத்துவதில் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், […]

பல கோயில்களை ஒரே பயணத்தில் தரிசிக்க வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஆன்மிக சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதியில் உள்ள 14 முக்கிய வைணவ திவ்ய தேசங்களுக்கு ஒரே நாளில் சென்று வர முடியும். வார இறுதி நாட்களில் மட்டும் இயக்கப்படும் இந்தப் பயணத்துக்காக 53 இருக்கைகள் கொண்ட ஏசி சொகுசுப் பேருந்து பயன்படுத்தப்படுகிறது. […]

அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தவெக தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கு மக்கள் தான் சரியான பதிலை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து நியாயம் கேட்பது போல் தனது எக்ஸ் பதிவில் அவர் கருத்துகளை பதிவு செய்துள்ளார். கட்சியின் வெற்றிக்காக பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளையும், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களையும் […]

ரேஷன் கடைகளுக்கான துவரம்பருப்பு கொள்முதலில் விலை குறைந்ததன் மூலம், மூன்று மாதங்களில் அரசுக்கு ரூ.187.56 கோடி அளவுக்கு செலவு மிச்சமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.31-க்கும் அதிகமான வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 60,000 மெட்ரிக் டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட திறந்தநிலை டெண்டரில், ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.77.89 என்ற விலையில் […]

கோயம்பேட்டில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சாமியார் வேடத்தில் திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28), கணவரைப் பிரிந்து தனது 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். அருகில் உள்ள பள்ளியில் […]

வேலையை விட்டுவிட்டு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் இடைவெளி எடுத்தாலும் EPF கணக்கில் இருக்கும் பணத்துக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கலாம். ஆனால் அந்த வேலை இடைவெளியில் சேரும் வட்டிக்கு வரி விதிக்கப்படுமா என்பது பலருக்கும் தெரியாத முக்கிய விஷயமாக உள்ளது. குறிப்பாக, ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டு வேலையை விட்டு வெளியேறியவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டால் EPF தொடர்பான அனைத்து வட்டிக்கும் […]

சமையலறை பட்ஜெட்டை பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது காய்கறிகளின் விலை. சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிலோ ரூ.60 வரை சென்றுள்ளது. இதேபோல் பெரிய வெங்காயமும் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதால், அன்றாட காய்கறி வாங்கும் குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து கணிசமாக சரிந்துள்ளது. தினசரி சுமார் 55 லாரிகளில் வந்த தக்காளி, தற்போது 35 லாரிகளாக குறைந்துள்ளது. சந்தைக்கு வரும் […]

குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற ஆசையை முன்வைத்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடத்தப்பட்டதாக கூறப்படும் கிரிப்டோ முதலீட்டு மோசடி தற்போது பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பணத்தை இழந்த நிலையில், இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FQL Exchange, VG Investment உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் இந்த மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட தொகையை முதலீடு […]

பீகார் மாநிலம் ஜமுய் சதர் அரசு மருத்துவமனையில், தாய் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தேவையான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே இந்த துயரத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக மாறியுள்ளது. குழந்தை பிறந்து சுமார் 6 மணி நேரத்துக்குள் தாயும் குழந்தையும் […]

வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் சில மணி நேரங்களிலேயே மீண்டும் தூசி படிந்துவிடுகிறதா? தரையை துடைப்பது மட்டும் போதாது. வீட்டுக்குள் தூசி சேருவதற்கு நாம் தினசரி பயன்படுத்தும் சில பொருட்கள், காற்றோட்டம் மற்றும் சுத்தம் செய்யும் முறைகளும் காரணமாக இருக்கலாம். கதவு, ஜன்னல் மற்றும் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகள் வழியாக வெளிப்புறத்தில் இருந்து தூசி வீட்டுக்குள் வருவது இயல்பானது. குறிப்பாக சாலையை ஒட்டிய வீடுகளில் வாகனங்கள் செல்லும்போது எழும் […]