சேலம் மாநகரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் 10 மெகாவாட் திறன் கொண்ட ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டி அருகே அரசுக்குச் சொந்தமான 92.49 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.291 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாக வெளியான செய்திகளை முன்வைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், கனிமொழியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் […]

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் அடுத்தகட்ட விரிவாக்கத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் புதிய வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் சிக்கன் பிரியாணியை இடம்பெறச் செய்வது குறித்த பரிசீலனையும் கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் […]

கர்நாடக மாநிலம் வணகெரே மாவட்டத்தில் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 36 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டவுன் சேகரப்பா பகுதியைச் சேர்ந்த நாகரத்னா (45), மூன்று குழந்தைகளின் தாய். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பவருடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் […]

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ரூ.2,000க்கு மேல் UPI பணப்பரிவர்த்தனைகளை ஏற்கமாட்டார்கள் என்றும், செப்டம்பர் 23ஆம் தேதி இந்தூரில் “No-UPI Day” கடைபிடிக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் போலியானது மற்றும் தவறானது என Indian Oil Corporation Ltd (IndianOil) தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்க் டீலர்களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான Merchant Discount Rate (MDR) கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை […]

குழந்தைகளுடன் வெளியில் செல்லும் பெற்றோர்கள் சாலையோரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஹைதராபாத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் வயதைக் கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் அவர்களை தனியாக விடாமல் கையைப் பிடித்தபடி அழைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஹைதராபாத்தின் IS சதன் […]

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முக்கிய அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் தொடர்ந்து சிலிண்டர் பெற விரும்பும் தகுதியான நுகர்வோர், வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையின் நோக்கம், அரசு வழங்கும் எல்பிஜி மானியம் தகுதியான பயனாளிகளுக்கு முறையாகச் சென்றடைவதை உறுதி செய்வதும், போலி […]

கல்வி மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மத்திய அரசின் செலவின முன்னுரிமைகளை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, உயர்கல்விக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் மாணவிகளுக்கு போதிய விடுதி வசதி இல்லாததால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். இதே விவகாரத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பவன் கேராவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பவன் […]

ஐஐடி பாம்பே மாணவர் சாஹில் வகோடே உயிரிழந்த சம்பவத்தில், பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மேலும் 2 பேர் அடையாளம் குறிப்பிடப்படாத குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20 வயதான சாஹில் வகோடே, ஐஐடி பாம்பேவின் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி படித்து […]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சிறுமிகளுக்கு கல்வி மற்றும் பொருளாதார உதவி வழங்கும் பெயரில் அவர்களை அணுகி, பின்னர் பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக போயஸ் கார்டனில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பங்களா வீடும் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஜெம் வீரமணியிடம் […]