கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்து, அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது மீனவர்கள் 9 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவர்களது மனைவிகளும் மருத்துவர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரான அழகாநந்தா என்பவர் திடீரென மருத்துவமனையின் மூன்றாவது தளத்திற்கு சென்று அங்கிருந்த செவிலியர்களிடம் தகராறில் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் […]
சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவுக்கு வாக்களிக்காத பொதுமக்களை சாபமிடும் வகையில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டைக்கு கொண்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் வாக்களித்திருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பாரதிய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட தேசியக்கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி, தியாகிகளின் தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக்கொடி பேரணி நடத்த பா.ஜ.க. சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டது. முதலில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாகவும், […]
மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் ‘பி.எம். கிசான்’ (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 6,000 ரூபாய் நிதியுதவியின் அடுத்த தவணையை எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் இத்திட்டத்தில், 23-வது தவணை நிதி கடந்த ஜூன் 20 அன்று விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, 24-வது தவணை நிதி […]
மார்பகப் புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் தோன்றும் கட்டிகள் அல்லது தோற்ற மாற்றங்கள் மட்டுமே அறிகுறிகள் என பெரும்பாலோர் கருதி வரும் நிலையில், தொடர்ச்சியான முதுகுவலியும் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணை […]
ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்களின் ஓய்வுக்கால தேவையைப் பூர்த்தி செய்ய வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) மட்டுமே போதுமானதா என்பது குறித்த முக்கிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் இ.பி.எஃப் நிதி, கூட்டு வட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் வளர்ந்து பெரிய தொகையாக மாறினாலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது அது மட்டுமே முழுமையான பாதுகாப்பைத் தராது என நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்தீர்மானத்தின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை […]
தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பலமாக மோதி சிக்கிக் கொண்டது. ஆனால், காரின் மோதிய சத்தத்தையோ? பின்னால் கார் சிக்கி இருந்ததையோ? லாரி ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் லாரியைத் தொடர்ந்து இயக்கிச் சென்று உள்ளார். இதனால் விபத்துக்கு […]

